மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்; வவுனியா பொலிஸில் முறைப்பாடு!
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதோடு இந்த விடயத்தில் தங்களுக்கு நீதி கிடைக்காமல் சிசுவின் சடலத்தை பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் குறித்த தந்தை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தொலைபேசியில் மூழ்கி இருந்த மருத்துவர்
பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையில் பெண் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். மறுநாள் அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டதையடுத்து, குறித்த பெண் தாதியொருவருக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் அதனை கவனமெடுக்காமல் தொலைபேசியில் மூழ்கி இருந்ததால் சிசு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் உயிரிழந்த சிசுவின் தாயாரும் தகவல்களை காணொளி ஊடாக வெளிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை மன்னார் வைத்தியசாலையில் மருத்துவர்களின் அலட்சியதால் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் வவுனியா வைத்தியசாலையில் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.