பச்சிளம் குழந்தையை பலியெடுத்த குரங்குகள் ; துயரில் கதறும் பெற்றோர்
ஒரு குடிசைவீட்டில் குரங்குகள் புகுந்து இரண்டு மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்று, நீர் நிரம்பியப் பீப்பாயில் போட்டுள்ளன.
இந்த சம்பவம், உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரை அடுத்த சூரஜ்பூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மூச்சுத் திணறி உயிரிழப்பு
குரங்குகளின் சத்தம் கேட்டு குடிசைக்கு ஓடிச்சென்ற பெற்றோர் அங்கு குழந்தையைக் காணாததால் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தேடி உள்ளனர். இறுதியில் அக்குழந்தை தண்ணீர் நிரப்பப்பட்ட பீப்பாயில் மூழ்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக குழந்தையை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் பெற்றோர் மற்றும் அக்குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட காலமாக குரங்குகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த கிராமவாசிகள் கூறுகின்றனர்.