Dedication Round; இந்திரஜித்துக்கு நடந்தது என்ன? தேடும் ரசிகர்கள்!
தென்னிந்தியபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகபம நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தமிழகத்தை தாண்டியும் இந்நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சரிகபம நிகழ்ச்சியில் Dedication Round ரசிகர்களின் ஆவல்களை தூண்டியுள்ளது என்று தான் கூறவேண்டும். Dedication Round இல் கடந்த வாரம் இலங்கையை சேர்ந்த இந்திரஜித் மற்றும் விஜயலோஷன் ஆகியோரின் பாடல்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
ப்ரோமோக்களில் Dedication Round
இந்த நிலையில் இவ் வாரம் இலங்கை போட்டியாளர்களின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதோடு கடந்த சில வாரங்களாக இந்திரஜித் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியது.
இது நிகழ்ழ்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று வெளியான ப்ரோமோக்களில் Dedication Round தொடர்கின்றது.
அந்தவகையில் இந்த வாரமும் Dedication Round இருப்பதால் ஒளிபரப்பு செய்யப்படாத போட்டியாளர்களின் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்படலாம் . அதோடு இந்திரஜித் மற்றும் விஜயலோஷன் பாடல்களும் இடம்பெறும் என்பதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.