இன்று 25 இண்டிகோ விமான சேவை ரத்து ; பயணிகள் பெரும் அவதி
சென்னையில் இருந்து இன்று வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய 25 இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமான பயணிகள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் செல்லக்கூடிய 25க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செய்வதறியாது விமான பயணிகள்
சென்னையில் இருந்து லட்சக்கணக்கான விமான பயணிகள் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய நிலையில், இன்று மட்டும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 25 இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திட்டமிட்டபடி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமலும், சொந்த நாடு திரும்ப முடியாமலும் செய்வதறியாது விமான பயணிகள் தவித்து வருகின்றனர்.
விமானிகளுக்கான புதிய விதிமுறைகள் காரணமாக, கடந்த இரண்டாம் தேதி முதல் இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், பல விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
இதனால் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி நேர கட்டுப்பாடு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் தற்போது மாற்றி அமைத்துள்ளது.
விமான பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய விமானிகளுக்கான ஓய்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப விமான இயக்கத்தை போதுமான விமானிகள் இல்லாததால், இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டபடிண விமானங்களை இயக்க முடியமல் போனதுதான் வருத்தம் தரக்கூடிய விஷயமாக உள்ளதாக விமான பயணிகள் தெரிவித்து வருகின்றனர்