ஹைதராபாத் - கொழும்பு இடையே நேரடி விமான சேவை: பிரபல விமான நிறுவனம் அறிவிப்பு!
ஹைதராபாத் மற்றும் கொழும்பிற்கிடையேயான புதிய நேரடி விமான சேவை எதிர்வரும் (02.11.2023) அறிமுகம் செய்யவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் (indigo airline ) அறிவித்துள்ளது.
வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தி, இரு நகரங்களுக்கு இடையே நேரடி இணைப்பை வழங்கும் முதல் இந்திய இண்டிகோ விமானம் ஆகும். இது சர்வதேச சந்தைகளில் இண்டிகோவின் மூலோபாய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும்.
இது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் திறமையான இணைப்பை வழங்குகிறது.
இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா கூறுகையில், "இந்த விமானங்களின் அறிமுகம் இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்கும்.
" தங்கள் பயணத்தைத் திட்டமிட விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பற்றுச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஹைதராபாத்-கொழும்பிற்கிடையே இயங்கவுள்ள சேவை விமானம் 6E 11811 புதன்கிழமையைத் தவிர, தினமும் சேவையில் இருக்கும் எனவும் மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வந்து சேரும்.