ஜனாதிபதி அநுர குமாரவுக்கு விருந்தளித்த இந்திய ஜனாதிபதி முர்மு!
புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வரவேற்று அவருக்கு மரியாதை செலுத்தி விருந்து அளித்துள்ளார்.
"இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நெருக்கமான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்" என்று இந்திய ஜனாதிபதி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பதவியேற்றதன் பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல இந்திய அமைச்சர்களையும் இன்றையதினம் (16-12-2024) சந்தித்துள்ளார்.