பிரபல இந்திய போதகர் பால் தினகரன் கடவுச்சீட்டு இலங்கையில் பறிமுதல்!
இலங்கைக்கு வர்த்தக விசாவில் சென்று ஜெப கூட்டத்தை நடத்தி, மக்களை திசை திருப்ப முயன்ற பால் தினகரன் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரன் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கைக்கு சென்றுள்ளார். மேலும், அவருடன் அவரது ஜீசஸ் கால்ஸ் குழுவும் சென்றுள்ளது.
இதனையடுத்து அவர்கள் உள்நாட்டு விமான மூலம் இரு நாட்களுக்கு முன்னர் (23-03-2023) இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மானிப்பாய் மற்றும் ரசவின் பகுதிகளில் இரு நாட்கள் மதப் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா அமைப்பு உட்பட அப்பகுதி மக்கள் சுவரொட்டிகளை ஒட்டி கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.
வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ள பால் தினகரன், இங்கு மதப் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க கூடாது என சிவசேனா அமைப்பினர் அப்பகுதி மக்களிடையே வலியுறுத்தினர்.
இது தொடர்பில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள், யாழ்ப்பாண பொலிஸ்மா உயர் அதிகாரிக்கு முறைப்பாட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பான செய்திகள்
இலங்கைக்கு வந்த பிரபல இந்திய போதகர் திருப்பி அனுப்பி வைப்பு!