கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை அதிரடியாக கைது
10 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதுடைய இந்திய பிரஜை குஷ் போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் கொள்வனவு செய்து பின்னர் டெல்லியில் இருந்து இன்றைய தினம் காலை 07.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்திய பிரஜை கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 10 கிலோ 750 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.