ஜனாதிபதி கோட்டபாயவின் இணையத்தளத்திற்குள் ஊடுருவிய இந்திய ஹக்கர்!
அநாமதேய இந்தியா என்ற ஹக்கர் குழுவினர் நேற்று ஜனாதிபதி கோட்டபாயவின் இணையத்தளத்திற்குள் ஊடுருவினரா என சந்தேகம் வெளியாகியுள்ளது.
அரசியல்வாதிகளின் ஊழலை அம்பலப்படுத்துமாறு இலங்கையர்கள் அவர்களிடம் வேண்டுகோள் அநாமதேய இந்தியா என்ற ஹக்கர் குழுவினர் நேற்று ஜனாதிபதி கோட்டபாயயின் இணையத்தளத்திற்குள் ஊடுருவினரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நேற்று சில மணிநேரம் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதியின் ஊடக பிரிவு பலர் இணையத்தளத்தை ஓரேநேரத்தில் பயன்படுத்த முயன்றதால் இந்த நிலைமை ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.
இதன்படி நிலைமை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது நிலைமையை சரிசெய்துள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஊடக பிரிவு எனினும் விமானப்படை மற்றும் இலங்கையின் கணிணி அவசரசூழ்நிலை பிரிவு ஆகியன இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மூன்றாம் தரப்பின் செயற்பாடுகள் குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள போதிலும் அநாமதேய ஹக்கர் குழு ஜனாதிபதியின் இணையத்தை ஹக் செய்ததாக தெரிவித்துள்ளது.
அநாமதேயம் என்பது சர்வதேச அளவில் பரவலாக்கப்பட்ட ஒரு ஹக்கர்கள் குழுவாகும். இவர்கள் பல்வேறு வழிமுறைகள் மூலம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழமை. இவர்கள் டிடிஓஎஸ்ddos தாக்குதல் மூலம் இணையத்தளங்களை செயல் இழக்கச்செய்வார்கள் அல்லது ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காக இரகசிய ஆவணங்களை தகவல்களை பகிரங்கப்படுத்துவார்கள்.
இந்த ஹக்கர்களிற்கு டுவிட்டர் மூலம் செய்தி அனுப்பியுள்ள இலங்கையர்கள் #AnonymoushelpSriLanka, அரசியல்வாதிகளின் சட்டவிரோத சொத்துக்கள் ஊழல்களை அம்பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
சில இலங்கையர்கள் ஹாஸ்டாக்கினை பயன்படுத்தி நாட்டின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர், பலர் ஊழல் அரசியல்வாதிகள் குறித்து தெரிவித்துள்ளதுடன் அவர்களின் ஊழலை அம்பலப்படுத்துவதற்கு அநாமதேய குழுவின் உதவியை நாடியுள்ளனர்.