பிரபல இயக்குநர் பாலாவின் முடிவால் பெரும் அதிர்ச்சியில் திரையுலகினர்
தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒன்று தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் தான் இயக்குநர் பாலா. இவரின் படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசு படமாக அமைந்துள்ளது.
மேலும் இவர் சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால், என பல முன்னணி நடிகரைகளை வைத்து வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு பிராதானா எனும் மகள் உள்ளார்.
மேலும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக மனதளவில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று பாலா – முத்துமலர் இருவரும் விவாகரத்து பெற்று முழுமையாக பிரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்திருப்பதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, தனுஷ் - ஜஸ்வர்யா விவகாரத்தைத் தொடர்ந்து இவருடைய விவாகரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.