அமெரிக்காவில் இந்தியர் செயலால் அதிர்ச்சி; மூவர் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவ யோகேஷ் எச். நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37), யாஸ் ஹான்னல் (6) மகன் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சந்தேகம்
கடந்த சனிக்கிழமை மனைவியையும் மகனையும் சுட்டுக்கொன்ற பின் யோகேஷ் நாகராஜப்பா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகியும் உடல்களைப் பெற முடியவில்லை என்றும், மூவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் , தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.