இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து வெளியான சர்ச்சையான தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் உடல் தகுதியை அதிகரித்துகொள்ள பல்வேறு ஊசிகளை பயன்படுத்துவதாகவும், ஊக்கமருந்து சோதனை மூலம் அதை வெளிப்படுத்துவது கடினம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போதே சேத்தன் சர்மா இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்தது,
தேசிய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் போராடுவதால், உடல் தகுதியை 100 சதவீதமாக உயர்த்த பலவித ஊக்க மருந்துகளை தனியார் மருத்துவர்கள் மூலம் செலுத்தி வருவதாகவும், அது பிடிபடவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய கிரிக்கெட் ஆணையமும் இந்த உண்மையை அறிந்து மறைக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
2020ஆம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு கடைசி டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவராக சேத்தன் ஷர்மா பணியாற்றிருந்தார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று பிரிவுகளிலும் இந்தியா முன்னணியில் இருக்கும் போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும், அணியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், தலைமைத்துவ மோதல்கள் போன்றவற்றையும் எடுத்துரைத்துள்ளார்.