இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் விவாகரத்து!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க ஒப்புக் கொண்டதால் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
ஜீவனாம்சம் கொடுக்க சஹால் ஒப்புதல்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்து நடன போட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க சஹால் ஒப்புக் கொண்டதால் இன்று (20) விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்தது .