இலங்கைத் தொடரில் முகமது ஷமிக்கு இடமில்லை!
இலங்கை அணிக்கு எதிராக ஓகஸ்ட் 15-ஆம் திகதி தொடங்கவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்த நிலையில், முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2023 ஒருநாள் உலகக்கிண்ணத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஷமி, கடைசியாக 2025 சாம்பியன்ஸ் தொடரிலும், பெப்ரவரி 2025-இல் இங்கிலாந்துக்கு எதிரான ரி20 தொடரிலும் விளையாடினார்.

இருப்பினும், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆகின்றன. நீண்டகால காயத்தில் இருந்து மீண்டு, உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய போதிலும் அவருக்குத் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தைக் கருத்தில் கொண்டு, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.