சிம்புவுடன் நடித்த நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை மஞ்சிமா மோகன் (Manjima Mohan).
இவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்(Gautham Vasudev Menon) இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் (STR) நடித்த அச்சம் அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாகியாக அறிமுகமானார்.
அந்த படம் மூலம் மஞ்சிமா மோகனுக்கு ரசிகர் பட்டாளம் குவிய தொடங்கியன.
இதை தொடர்ந்து கொளதம் கார்த்தி நடிப்பில் வெளியான தேவராட்டம், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் என இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் பரபரப்பான நடிகையாக வலம் வருகின்றார். மேலும் இவர் நடிகர் கௌதம் கார்த்தியைக் காதலிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் கசிந்த வண்ணம் இருந்தன. ஆனால் இதற்கு அவர் அண்மையில் போட்டி ஒன்றில் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க நடிகை மஞ்சிமா மோகன் சமீபகாலமாகவே தொடர்ந்து உடல் எடை கூடிக்கொண்டே வருகிறார்.
இந்த நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டாக வந்து விட்டீங்களே என புலம்பி வருவதைக் சமூக வலைதளத்தில் காண முடிகிறது.