இலங்கை அனைத்தையும் கொண்ட ஒரு நாடு; பாராட்டிய நடிகர் சரத்குமார்!
இலங்கை வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார் நாட்டின் சுற்றுலா அபிவிருத்தியைப் பாராட்டியுள்ளார்.
இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் புதன்கிழமை (05) இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கை அனைத்தையும் கொண்ட ஒரு நாடு
கண்டிக்கு நேற்று (06) விஜயம் செய்தபோது, அந்தப் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய 07 நட்சத்திர ஹோட்டலைப் பார்வையிட்ட நடிகர் தெரிவிக்கையில்,
இது உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களைப் போன்ற 7 நட்சத்திர ஹோட்டல். இது மே அல்லது ஜூன் மாதங்களில் திறக்கப்படும். நான் அதைப் பார்க்க வந்தேன். சுகாதாரம் தொடர்பான எல்லா வசதிகளும் இங்கே உள்ளது.
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் சேவைகள் கிடைக்கின்றன என நடிகர் சரத்குமார் தெரிவித்தார். இலங்கை அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு நாடு எனவும் இங்கே எல்லாம் கிடைக்கிறது.
பனிப் பொழிவைத் தவிர்ந்து இலங்கையில் ஏனைய எல்லா காலநிலையும் கிடைக்கிறது, என நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.