இலங்கை மக்களுடன் எப்போதும் இந்தியா துணைநிற்கும்-; உயர்ஸ்தானிகர் உறுதி!
இலங்கையிலுள்ள சகல மக்களுடனும் இந்தியா எப்போதும் துணைநிற்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவால் தற்போதைய நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர், திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற காலை நேர பூஜை வழிபாடுகளில் இன்று கலந்துகொண்டார். இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் மத்தியிலும் திருக்கோணேஸ்வரம் ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்றதாக உள்ளது.
6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமயக் குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால், தேவாரங்களில் போற்றிப் பாடப்பெற்ற இலங்கையின் இரு தலங்களில் திருக்கோணேஸ்வரமும் ஒன்றாகும். இதேபோல பாடல்பெற்ற பெருமைக்குரிய மற்றொரு தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் புனருத்தாரணம் செய்யப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் 200 குடும்பங்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரால் மனிதாபிமான உதவிப்பொருட்கள் கையளிக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) பிராந்திய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுக்கு விருதுகளை வழங்கியுள்ளார்.
கார்கிவ் விடுதலையிலும், மைகோலைவ் மற்றும் சபோரிஷியா உள்ளிட்ட பல பகுதிகளின் பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்புப் போராளிகள் எவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்பதை ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) குறிப்பிட்டார்.
கார்கிவ் பிராந்தியம், குறிப்பாக, போடோலியா மற்றும் கியேவ் ஒப்லாஸ்ட்டில் இருந்து பிராந்திய பாதுகாப்பு இராணுவப் பிரிவுகளால் விடுவிக்கப்படுகிறது, என்று அவர் கூறினார்.
பிராந்திய பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், இது நமது தேசிய பாதுகாப்பின் சிறந்த அடித்தளம் என்றும் அவர் கூறினார்.