விண்வெளி சாதனையை தொடர்ந்து இந்தியாவின் அடுத்த முயற்சி!
விண்வெளி துறையில் சாதனை படைத்து வரும் இந்தியா , அடுத்த கட்டமாக ஆழ்கடலின் இரகசியங்களை ஆராயும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் 'மத்ஸ்யா 6000' என்ற நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி உள்ளது.
இந்த நீர்மூழ்கி கப்பல், கடல் மட்டத்தின் கீழ் 6000 மீற்றர் ஆழத்திற்கு 3 ஆய்வாளர்களை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஆழ்கடலின் வளங்களை ஆய்வு செய்து, நீடித்து நிலையாக பயன்படுத்துவதற்கான தொழில் நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்துவதே இதன் நோக்கம் என தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவகத்தின் இயக்குனர் ஆனந்த் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இந்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் இந்தியாவின் முதன் முதல் மனித கடல் ஆய்வு பணியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.