இக்கட்டான கட்டத்தில் இலங்கைக்கு உதவிய அயல்நாடு நாங்கள் மட்டும்தான்!
இந்து சமுத்திரம் முக்கியத்துவம் பெறுவதால் பல நாடுகள் தங்கள் செல்வாக்கை விஸ்தரிப்பதற்காக இந்து சமுத்திர பகுதியில் தங்கள் செயற்பாடுகளை தீவிரப்படுத்துகின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் (S. Jaishankar) தெரிவித்துள்ளார்.

சீனாவின் யுவான் வாங்5 கப்பலிற்கு அம்பாந்தோட்டையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தியா சீனாவிற்கான மற்றுமொரு மோதல்களமாக இந்துசமுத்திரம் மாறாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்கவேண்டும் ஆனால் இந்து சமுத்திரத்திற்கான உரிமை தனக்குமட்டும் தான் என இந்தியா தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்,
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அதற்கு உதவிய அயல்நாடு இந்தியா மாத்திரமே எனவும் தெரிவித்துள்ளார்.