இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு
இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது என தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா உதவுகிறது.

வரியில்லா வர்த்தக சேவை மூலம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு ஒரு கேட்வே போல இலங்கை அமைந்துள்ளது. ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும் இலங்கை அரசு தருகிறது.
இந்தியாவின் 5400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனையாகிறது. இதுபோல வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் இறக்குமதி வரிவிதிப்பு 22 முதல் 40 சதவீதம் வரி உள்ளது.இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது.
இந்தியாவில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிலம், பத்தாண்டு வரிவிலக்கு, இயந்திர தளவாட சலுகைகளை அளிக்கிறோம்.
மேலும் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும் இலங்கை அரசு தருகிறதாகவும் லங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.