சுதந்திர சதுக்க வளாகத்தில் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு இப்படியொரு நிலைமையா?
கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்திற்குள் உள்ளூர் சுற்றுலா பயணிகள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தடை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14-03-2023) விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இன்றைய தினம் சுதந்திர சதுக்க வளாகத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் பொது நிர்வாக அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சுதந்திர சதுக்க வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதையடுத்து கொழும்பு – சுதந்திர சதுக்க வளாகத்திலுள்ள நீர் தடாகங்கள் சுத்திகரிக்கப்படாது, கழிவுடன் காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், ஓய்வூ பெறுவதற்கும், உடற்பயிற்சிக்காகவும் வருகைத் தரும் தமக்கு, இதனால் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.