இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரித்துகொண்ட செல்லும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
நாட்டில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை அடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்கும் இது தொடரும் என்று சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.
இதேவேளை தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதால் தனிமைப்படுத்தல் நிலையங்களை வைத்தியசாலைகளாக மாற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாளாந்தம் 22 அல்லது 23 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் , கொழும்பு , கம்பஹா, குருணாகல், களுத்துறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் நூற்றுக்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நாட்டில் 8 மாவட்டங்களில் 20 இற்கும் அதிக பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இரவு 10 மணி வரை மாத்திரம் 1531 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 106 030 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95 445 பேர் குணமடைந்துள்ளதோடு , 9924 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று ஒரே நாளில் 23 730 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரையில் நாட்டில் 2.7 மில்லியன் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.