இலங்கையில் அதிகரித்து வரும் புற்று நோயாளர்கள்
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 38,772 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை ஒவ்வொரு வருடமும் சுமார் 5200 மார்பக புற்றுநோயாளிகள் பதிவாகுவதாகவும் சமூக மருத்துவ நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மிகவும் பொதுவான புற்றுநோயாக பதிவாகியுள்ளது.
இரண்டாவது தைராய்டு புற்றுநோய். மூன்றாவது பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை புற்றுநோய்களை உடைய ஆண்களுக்கு, வாய்ப் புற்றுநோய்தான் முதன்மையாளதாக காணப்படுகின்றது.
ஒரு ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரத்து 400 வாய்ப் புற்றுநோயாளர்கள் இனங்காணபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் புற்றுநோய்யாளர்கள் சுமார் 1,700 பேரும் பெருங்குடல் புற்றுநோயானது ஆண்களுக்கு மூன்றாவது பொதுவான புற்றுநோயாக இனங்கானப்பட்டுள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பெருங்குடல் புற்றுநோய் அல்லாத புற்றுநோய்களே அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.