அதிகரித்து வரும் டீசலின் நாளாந்த தேவை..
டீசல் விலை அதிகரித்த போதிலும் டீசல் விற்பனை காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் நட்டத்தை சந்திக்க நேரிடும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் ஆனால் நேற்று நள்ளிரவு செய்யப்பட்ட திருத்தத்தில் ஒரு லீற்றர் டீசலுக்கு 55 ரூபா மாத்திரமே உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றது.
பெப்ரவரி மாதத்திலும் அதற்கு முன்னரும் பெற்றோலியத்தின் நாளாந்த தேவை 1000 மெற்றிக் தொன்களாலும் டீசலின் நாளாந்த தேவை 2500 மெற்றிக் தொன்களாலும் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார் .