இலங்கையில் அதிகரித்த தொற்றாளர்கள்; மேலும் ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா!
இலங்கையில் மேலும் ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் கடந்த 11ஆம் திகதி வரையில் பிந்தி பதிவான நோயாளர்களின் எண்ணிக்கையே இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 75 ஆயிரத்து 432 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை, நாட்டில் தொற்றில் இருந்து மேலும் 335 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 768 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் , தொற்றுக்கு உள்ளான 15 ஆயிரத்து 358 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.