வீட்டில் செல்வம் பெருக....பெண்கள் சொல்லவேண்டிய ஒரு வரி மந்திரம்!
வீட்டிற்குள் மகாலட்சுமி கடாட்சம் தங்குவதற்கு, பெண்கள் செய்ய வேண்டிய மிக மிக எளிமையான இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால் போதும் லட்சுமி கடாட்சம் இல்லாத வீட்டில் தான் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கும்.
லட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவழைக்க
மந்திரம் லட்சுமி தேவியை வீட்டிற்குள் வர வைப்பதற்கு சுலபமான ஆன்மீகம் சார்ந்த வழியை நாம் பார்க்கலாம். பெண்கள் வீட்டு வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்று உள்ளது.
முதலில் படுக்கையில் இருந்து பெண்கள் காலையில் கண்விழித்தும், தெய்வத்தை வணங்கி விட்டு, உடனடியாக கண்ணாடி முன்பு சென்று அவர்களுடைய தலையை சரி செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு பல் தேய்த்து முகம் கை கால் அலம்பி காலை கடன்களை முடித்துவிட்டு, குளிக்கவில்லை என்றாலும் நெத்திக்கு பொட்டு இட்டுக்கொண்டு தான் நிலை வாசல் கதவை திறக்க வேண்டும்.
நிலைவாசல் கதவை திறக்கும் போது வாசல் கூட்ட துடைப்பம், குப்பை கூடை, என்று எல்லா பொருட்களையும் கையில் எடுத்துச் செல்லக்கூடாது.
‘வரலட்சுமியே வருக வருக’
இரண்டு கைகளையும் நிலை வாசல் கதவில் வைத்து திறக்கும் போது, கோவிலின் வாசல் கதவை திறப்பதாக நினைத்து திறக்க வேண்டும்.
‘வரலட்சுமியே வருக வருக’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி அதன் பின்பு கதவை திறக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டு வாசலில் நிற்கும் மகாலட்சுமி, வரலட்சுமி ஆக உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவாள்.
தினம் தினம் மகாலட்சுமியை இப்படி வரவேற்கக் கூடிய வீட்டில் வறுமை என்பது நிச்சயம் இருக்காது. தினமும் இந்த விஷயத்தை நீங்கள் பின்பற்றி வரலாம்.
தினமும் முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை மட்டுமாவது இதை தொடர்ந்து செய்து வர வீட்டில் லட்சுமி கடாட்சமும் நிலைத்திருக்கும்.