இலங்கைக்கு அந்நியசெலவாணி வரவு அதிகரிப்பு
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக நாட்டுக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை அவர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
8 மாதங்களில் 2,215 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு
கடந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2,215 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இந்த தொகை 74.4 வீதமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த வருடம் ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம், தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
மேலும் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.