உலகக்கிண்ண கோப்பை நடுவர்களின் வருமானம் எவ்வளவு தெரியுமா!
உலகக்கிண்ண கோப்பை நடுவருக்கு ஏறக்குறைய ரூ.94 இலட்சம் (ஒரு லட்சம் அமெரிக்க டொலர்) சம்பளம் அளிக்கப்படும் என கூறப்படுகின்றது. இது தவிர போட்டி கட்டணம், நாக்-அவுட் சுற்றில் இருந்து போனசும் வழங்கப்படும்.
உதவி நடுவர்களுக்கு ரூ.24 இலட்சம் சம்பளம் வழங்கப்படுகின்றதாம். 23ஆவது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடுகின்றன.

ஒரு லட்சம் அமெரிக்க டொலர்
மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டி தொடங்கியது முதல் ஒவ்வொரு அணியினரும் கோல்களை அடித்து, புதிய புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். போட்டியில் வீரர்கள் எந்தளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு நடுவர்களின் பணியும் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த தொடரில், ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகளில் இருந்து நடுவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். போட்டிகளுக்கேற்ப கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து கூடுதலாக 16 நடுவர்கள் போட்டி தொடரில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதன்படி, இந்த போட்டி தொடரில் மொத்தம் 52 நடுவர்கள் இருப்பார்கள். 2 போட்டிகளுக்கு தலா ஒரு நடுவர் என்ற கணக்கில் போட்டிகளை அவர்கள் வழிநடத்தி செல்வார்கள். கடந்த முறை நடந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 69 உதவி நடுவர்கள் இருந்தனர்.
இந்த முறை கூடுதலாக 19 பேர் சேர்க்கப்பட்டு மொத்தம் 88 உதவி நடுவர்கள் உள்ளனர். இதுபோக 30 வீடியோ உதவி நடுவர்கள் பணியாற்றுகிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு நடுவரும், 4 உதவி நடுவர்களும் செயல்படுவார்கள்.
நடுவருக்கு ஏறக்குறைய ரூ.94 இலட்சம் (ஒரு லட்சம் அமெரிக்க டொலர்) சம்பளம் அளிக்கப்படும் என கூறப்படுகின்றது. இது தவிர போட்டி கட்டணம், நாக்-அவுட் சுற்றில் இருந்து போனசும் வழங்கப்படும். உதவி நடுவர்களுக்கு ரூ.24 இலட்சம் சம்பளம் வழங்கப்படுகின்றது.