யாழ்.நகர்ப் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேக நபர் தான் கொண்டு செல்லும் பையில் இரு கத்திகளையும் வைத்து கொண்டு செல்லும் சந்தர்ப்பம் வரும்வேளையில் கத்தியைக் காட்டி மிரட்டி திருடி வந்துள்ளார்.
அதேபோல் இன்று யாழ்.மாம்பழச் சந்தியில் உள்ள புத்தக கடையொன்றினில் நுழைந்து அங்கு நின்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து திருட முற்பட்டுள்ளார். இதன்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் கடைக்குள் ஓடினார்கள்.
அதனைப் பார்த்த திருடன் தப்பியோடிய பின்னர், உணவகம் ஒன்றினுள் நுழைந்து திருட முற்பட்டபோது மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். அதன் பின்னர் சந்தேக நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர் எந்த நேரமும் அழுக்கான உடையுடன் யாழ்.நகர் வீதிகளில் நடந்து செல்வதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டது போல் உலாவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.