நடிகர் அர்ஜுன் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
தென்னிந்திய சினிமா நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். கர்நாடக மாநிலம் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவம்மாவின் உயிரிழந்த நிலையில் , அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே ஊரில் அவர்களது தோட்டத்தில் உள்ள அர்ஜுனின் அப்பாவின் சமாதி அருகே நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அர்ஜுனின் தந்தையும் கன்னட நடிகருமான சக்தி பிரசாத், தான் அர்ஜுன் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணம். போலீஸ் அதிகாரியாக வேண்டும் என அர்ஜுன் ஆசைப்பட்டிருந்தார்.
தென்னிந்திய சினிமாவில் 30 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து ஆக்சன் கிங் என அர்ஜுன் பெயர் பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த இரும்புத் திரை படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர் அர்ஜுன்.