யோஷித ராஜபக்ஷ எந்த சிறையில் உள்ளார்? வெளியான தகவல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் பொது வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க கூறினார்.
யோஷித ராஜபக்ஷ அங்கு தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து விசேட தேவைகள் எதையும் கோரவில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி. வி. சானக ஆகிய இருவரும் சிறைச்சாலைக்கு இன்று (26) வந்ததாகவும் அவர் கூறினார்.
இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால், சிறைச்சாலை கண்காணிப்பில் உள்ள யோஷித ராஜபக்ஷவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் காமினி பி. திசாநாயக்க மேலும் கூறினார்.