இலங்கையில் ஜெட் வேகத்தில் உயர்ந்த கேக்கின் விலை!
உள்ளூர் சந்தையில் முட்டை தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1,500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
சந்தையில் முட்டை ஒன்றின் விலை சுமார் 70 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முட்டை விலை கணிசமாக உயர்ந்தாலும், சந்தையில் முட்டையை கண்டுபிடிக்க முடியவில்லை.
செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தும் வகையில், சந்தையில் மாஃபியா உருவாகியுள்ளது.எனவே, விலைவாசி உயர்வால், மக்கள் கேக் வாங்க கடைகளுக்கு வருவதில்லை, என்று அவர் குறிப்பிட்டார்.
வெதுப்பகங்களில் கூட கேக்கிற்கு வெண்ணெய் பயன்படுத்த முடியாது. வெண்ணெய் பயன்படுத்தினால், ஒரு கிலோ கேக்கின் விலை 3,000க்கு உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே சந்தையில் முட்டை விலையை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து நுகர்வோரை நிம்மதி அடையச் செய்ய வேண்டும் என்று ஜயவர்த்தன கோரிக்கை விடுத்தார்.