படையினருக்கு பதில் ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு!
கொழும்பில் மக்கள் போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில் ஆயுதம் தாங்கிய படையினருக்கு இலங்கையின் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அதன்படி ஊரடங்கு சட்டமும், அவசர காலச் சட்டமும் நடைமுறையிலுள்ள தற்போதைய சந்தர்ப்பத்தில் நிலைமைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு ஆயுதம் தாங்கிய படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் அமைதியை பேணுமாறும் பொதுமக்களிடமும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களின் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், போராட்டக்காரர்கள் பாசிசத்தை நாடுவதாக குற்றங்சாட்டியுள்ள அவர், இந்த முயற்சிகளைத் தடுக்கவும், நாட்டில் இயல்புநிலையை மீட்டெடுக்கவும் அவசரகால விதி மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் கூறினார்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குழுவொன்று இன்று (13) பிரதமர் அலுவலகம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளின் வீடுகளை முற்றுகையிட சதி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.