அதிரடி சோதனையில் 744,500 மாத்திரைகள் பறிமுதல்
வத்தளை பகுதியில் கடந்த பெப்ரவரி 02 ஆம் திகதி சுமார் எழுநூற்று நாற்பத்து நான்காயிரத்து ஐநூறு (744500) மருந்து மாத்திரைகளை (Pregabalin Capsules) ஏற்றிச் சென்ற ஒரு லொறியுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்கள் ரங்கல மற்றும் கெமுனு மற்றும் வத்தளை பொலிஸ் நிலையம் ஆகியவை வத்தளை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான லொறியொன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

குறித்த லொறியில் இருந்து, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எழுநூற்று நாற்பத்து நான்காயிரத்து ஐநூறு (744,500) மருந்து மாத்திரைகளுடன் (Pregabalin Capsules) இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் லொறியும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 28 முதல் 32 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் கோலைகனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், மேலும் குறித்த சந்தேக நபர்கள், மருந்து மாத்திரைகள், மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.