இந்திய கடன் உதவியின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்த திட்டம்!
15 மில்லியன் டொலர் இந்திய கடன் உதவியின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க (Vidura Wickremanayake) ஆகியோர் கலந்துரையாடியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் யாழ் கலாசார நிலையத்தின் செயற்பாடு உள்ளிட்ட முன்னுரிமை திட்டங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த நிதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள துறவிகளை பயிற்றுவிக்கும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிரிவேனாக்களில் சூரிய சக்தி வசதிகளை நிறுவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
குறித்த நிதியுதவியானது இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.