அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி” எனும் தலைப்பில் இலங்கை மத்தியவங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) நடாத்தும் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் (Mahinda Yapa Abeywardena ) ஆலோசனைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கலந்துரையாடல் 2022 ஓகஸ்ட் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிதி விடயங்கள் தொடர்பான எதிர்கால நாடாளுமன்ற விவாதங்களில் வினைத்திறனாக பங்குபற்றுவதற்கு பயனுள்ள வகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி பற்றிய உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.