கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ள அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள பற்றுகளுக்கு உடனடியாக செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டும் பொழுது திறைசேரியில் இருந்து பணம் கிடைப்பதற்கு ஏற்ப அவை பகுதி பகுதியாக செலுத்தப்படுவதற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்டுமானத் துறையில் சேர்ந்தவர்களை பாதுகாக்க முடியாவிட்டால், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நாம் பல பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.
13 இலட்சத்திற்கு அண்மித்த தொழிலாளர்கள் அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
வழக்கமான தொழில் துறையிலிருந்து விலகி வேறு தொழில் துறைக்கு அல்லது வேறு முதலீட்டு முயற்சிகளின் ஊடாக அந்த வளங்களைப் பயன்படுத்தி வேறு தொழில்களுக்கு ஈடுபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அது நமது கடமை. அதன்படி, அதற்கு எம்மால் செய்யக் கூடிய அத்தனை முயற்சிகளையும் எடுப்போம.