கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு
கொரோனா தொற்றுக்கு ஆளான கர்பிணிப் பெண்கள் அதன்பிறகான நோய் பாதிப்புகளுக்கும் ஆளாவதாக மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் கூறுகையில்,
கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த கர்பிணிப்பெண்களுக்கு 4 வாரங்களுக்கு பிறகு சுவாசக் கோளாறு,தசை வலி,உடல் சோர்வு மற்றும் முழங்கால் வலி ஆகியவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பானது தீவிர நிலை இல்லையென்றாலும் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது. என்றார்.