மின் கட்டண சலுகை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மின் கட்டணங்களில் வழங்கப்பட்டிருந்த சலுகை தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி சுற்றலா விடுதிகள் மின்சார கட்டணத்திற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மின்சக்தி அமைச்சருடன் கலந்துரையாடி இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா விடுதிகளுக்கு மின்சார கட்டணங்களில் சலுகை காலம் வழங்கப்பட்டிருந்தது.
அதனை அவகாசம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவுற்றது.
மேலும் தற்போது சுற்றல்துறை வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து இந்த சலுகையை மேலும் நீடிக்க சுற்றலா உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு சலுகையை நீடிக்க கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுற்றலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.