சர்வதேச நாணய நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனை
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சில முக்கிய விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுலி கோசெக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் நிபந்தனைகள் நிறைவவேற்றப்பட்டால் மட்டுமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அரசாங்கமும் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டை எட்டியிருந்ததாகத் தெரித்துள்ளார்.
மூன்றாம் கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் கடன் தொகையை சர்வதேச நாணய நிதியம் வழங்க உள்ளது.
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க அடிப்படையில் காணப்படுவதகா கொசெக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நிறைவில் அந்நிய செலாவணி கையிருப்பு 6.1 பில்லியன் டொலர்கள் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.