இலங்கை கோரிய அவசர நிதி உதவி தொடர்பில் IMF வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக உருவான பாரிய பாதிப்புகளை ஈடுசெய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இலங்கை கோரியுள்ள அவசர நிதி உதவி தொடர்பான தீர்மானம் நாளை மறுநாள் (19.12.2025) அறிவிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
Rapid Financing Instrument (RFI) எனப்படும் அவசர நிதி வசதியின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கை அதிகாரிகள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை கோரியுள்ளனர்.

இந்த கோரிக்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குட்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான இறுதி முடிவு நாளை மறுநாள் அறிவிக்கப்படும் எனவும் IMF அறிவித்துள்ளது.