சட்டவிரோதமாக நாடு திரும்பிய தாய் மற்றும் பிள்ளைகள் யாழில் கைது!
மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகில் அவர்கள் சட்டவிரோதமாக நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்திதுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 30 வருட வாழ்க்கை
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது 1990 ஆம் ஆண்டு குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாயாரும் அவரது ஆண் பிள்ளையும், பெண்பிள்ளையும் தமிழகத்திற்கு சென்று சென்னையில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய மீனவர்களின் உதவியுடன் படகு மூலம், யாழ் வடமராட்சி குடத்தனை பகுதியில் வந்திறங்கி உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிசாரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.