தமிழர் பகுதியில் தொடரும் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு - தட்டிக்கேட்க யாருமில்லை
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் அதிகளவில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்ட விரோத மணல் அகழ்வு கடலை அண்மித்த பிரதேசங்களில் அன்றாடம் அதிகரித்துசென்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கல்லாறு, உமையாள்புரம், விளாவோடை, தட்டுவன்கொட்டி ,இரணைமடு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களாக ஊரியான், முரசு மோட்டை, பெரியகுளம் ,கிளாலி உள்ளிட்ட பிரதேசங்களில் மணல் அகழ்வுச் செயன்முறை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றன.
மேலும் இதுத்தொடர்பில் முறைப்பாடு செய்தால் அன்றிரவே தங்கள் வீடு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல தடவைகள் முன்வைக்கப்பட்ட போதும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
சட்ட விரோத அகழ்வு சார்ந்து மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு பல தடவைகள் கொண்டு சென்றபோதும் இதுவரை யாராலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களில் பலர் அரசியல் தரப்புகளின் செல்வாக்குள்ளவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.