இரண்டுமாடி வீடொன்றில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாணந்துறை - பின்வத்த பிரதேசத்தில் உள்ள இரண்டுமாடி வீடொன்றில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை பின்வத்த பொலிஸார் நேற்று (06) இரவு சுற்றிவளைத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது அங்கு இருந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரண்டுமாடி வீட்டிலிருந்து 200 லீற்றர் கோடா, 2 எரிவாயு அடுப்புகள், சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் சட்டவிரோத மதுபானத்தை உற்பத்தி செய்து வாதுவை, பாணந்துறை, பண்டாரகம மற்றும் வஸ்கடுவ உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.