நாட்டின் இரு முக்கிய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற சட்டவிரோத பரிமாற்றம் ; அம்பலமான முக்கிய தகவல்
கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். இருவரும் பிரதான இரு கட்சிகளை சேர்ந்தவர்கள்.
அவர்கள் ஆட்சியிலிருந்தமையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது இரகசியமாக சட்டத்துக்கு புறம்பாக வானக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாகன கொடுக்கல் வாங்கல்
களுத்துறையில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சமீப நாட்களாக சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.
இருவரும் பிரதான இரு கட்சிகளை சேர்ந்தவர்கள். முன்னரே இவ்வாறான ஊழல் தொடர்பில் ஏன் வெளிப்படுத்தப்படவில்லை என கேட்க வேண்டாம்.
அவர்கள் ஆட்சியில் இருந்தமையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது இரகசியமாக சட்டத்துக்குப் புறம்பாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வாகன கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தினர் தமது வியாபாரங்களுக்காக மாத்திரமே ஆட்சி செய்தனர். எனினும் நாம் மக்களுக்கு செயல்படும் அரசாங்கம், அதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம் என்றார்.