மாகாணங்களுக்கு இடையே சட்டவிரோத பஸ் சேவைகள்!
நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் என கூறி, தற்போது நாட்டின் பல பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையேயான பஸ்கள் இயக்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
. லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை அருகில் இருந்து நீண்ட தூர பஸ்கள் இயக்கப்படுவதாக அச்சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை அத்தியாவசிய சேவைகளுக்காக பஸ்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கி சுகாதார அமைச்சுடன் இணைந்த அதிகாரிகளால் கையொப்பமிடப்பட்ட ஆவணம் பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் பயணிகளுக்கான கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.