சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மாட்டிறைச்சி கடையின் உரிமையாளர் உட்பட மூவர் நிட்டம்புவ பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திஹாரிய பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திஹாரிய, ருக்கஹவில மற்றும் கஹடோவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58, 65 மற்றும் 70 வயதுடையவர்கள் ஆவர்.
அத்துடன் மாட்டிறைச்சி கடையிலிருந்து உயிருள்ள மாடொன்றும், இரு மாடுகளின் இறைச்சிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.