யாழில் அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் ; வசமாக பிடிபட்ட நபர்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணலை அகழ்ந்து , சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த நபரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்
அரியாலை பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி பெருந்தொகை மணலை ஒருவர் சேமித்து வைத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த நபரை கைது செய்தனர்.

அனுமதிகள்
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 08 க்யூப் மணலை பொலிஸார் கைப்பற்றினர்.
அத்துடன் குறித்த மணல் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுக்கப்பட்டவை என்பதனையும் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்