சஜித்துக்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி! தமிழ் அரசியல்வாதிகளுக்குள் குழறுபடி!

Sri Lankan Tamils Sajith Premadasa Sri Lanka Politician Sri Lanka Presidential Election 2024
By Shankar Sep 10, 2024 04:42 PM GMT
Shankar

Shankar

Report

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிலையில், இன்று (10) வவுனியாவில் கூடிய ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான கட்சியின் விசேட குழு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரி எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கும், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

சஜித்துக்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி! தமிழ் அரசியல்வாதிகளுக்குள் குழறுபடி! | Ilankai Tamil Arasu Kachchi To Support Sajith

நாட்டின் 9அவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.

சஜித்துக்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி! தமிழ் அரசியல்வாதிகளுக்குள் குழறுபடி! | Ilankai Tamil Arasu Kachchi To Support Sajith

ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாக கடந்த மாத இறுதியில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இம்மாதம் முதலாம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதெனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

சஜித்துக்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி! தமிழ் அரசியல்வாதிகளுக்குள் குழறுபடி! | Ilankai Tamil Arasu Kachchi To Support Sajith

ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத தலைவர் மாவை சேனாதிராஜா எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார்.

அதேவேளை மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று லண்டனில் இருந்த சிறிதரன், சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாச வழங்கிய உத்தரவாதம் என்னவென்று கேள்வி எழுப்பியதுடன், இம்முறை தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதற்குத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

சஜித்துக்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி! தமிழ் அரசியல்வாதிகளுக்குள் குழறுபடி! | Ilankai Tamil Arasu Kachchi To Support Sajith

இத்தகைய குழறுபடிகளுக்கு மத்தியில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர்கள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து, அவற்றின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கும் நோக்கில் தமிழரசுக்கட்சியினால் கடந்த மாதம் நிறுவப்பட்ட விசேட குழு செவ்வாய்க்கிழமை (10) வவுனியாவில் கூடியது.

தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் உள்ளடங்கும் குழுவில், சரவணபவன் தவிர்ந்த ஏனைய ஐவரும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.

அத்தோடு எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிதரன், அவரது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவே முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததாகவும், ஆனால் அது அவருடைய விருப்பம் எனும்போதிலும், கட்சி அதற்கு அனுமதி அளிக்காது எனத் தாம் கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா,

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கட்சியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு இசைவாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தி விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்கு சிறிதரன் உள்ளடங்கலாக சகலரும் இணங்கியதாகவும் கூறினார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US