உங்க கணவன் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டுமா அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
கணவனின் ஆயுள் அதிகரிக்க கணவன் சந்தோஷமாக வாழ தினம் தினம் சுமங்கலி பெண்கள் பிரார்த்தனை வைப்பது வழக்கம்.
அந்த காலமாக இருந்தாலும் சரி இந்த காலமாக இருந்தாலும் சரி, கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக் கூடிய பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆகவே எவ்வளவு தான் நவ நாகரீகமாக இந்த உலகம் மாறினாலும், கணவன் மனைவி உறவு, மாங்கல்யம் இதற்கு இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் குறைய போவது கிடையாது.
பெண்கள் தீர்க்க சுமங்கலி வரத்தை பெற செய்ய வேண்டிய வழிபாடு
இந்த வழிபாடை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வழிபாட்டை செய்யவில்லை என்றாலும் சரி, வீட்டில் முருகனுடைய திருஉருவப்படம், வள்ளி தெய்வையானையோடு இருக்க வேண்டும்.
இது குடும்ப ஒற்றுமைக்கு கணவன் மனைவி ஒற்றுமைக்கு மிகவும் நல்லது.
வீட்டு பூஜை அறையில் இந்த திருவுருவப்படம் இல்லை என்றால் முதலில் வாங்கி வைத்து விடுங்கள்.
பரிகாரம்
திங்கட்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 27 திங்கட்கிழமை முருகரின் பாதங்களில் ஒரு மஞ்சள் கயிறை வைத்து விட்டு குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி மனப்பூர்வமாக கணவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பிரார்த்தனையை முடித்துவிட்டு இரண்டு கற்கண்டு நெய்வேதியம் ஆக வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
குங்குமத்தை நெற்றியிலும் மாங்கல்யத்திலும் இட்டுக் கொள்ளுங்கள்.
தானமாக கொடுத்தல்
இந்த திருமாங்கல்யகயரை கொண்டு போய் கோவிலில் நின்று அந்த கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
வெற்றிலை பாக்கு, பூ, பழம், மஞ்சள் குங்குமம் கூடவே இந்த திருமாங்கல்ய கயிறையும் வைத்து தானம் கொடுத்து விட்டால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.
மாங்கல்யம் தோஷம் இல்லை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்தால் கணவரின் ஆயுள் நீடிக்கும். தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம்.